Saturday 9 March 2013

உன்னுடன் நானும் நடக்கவே, பயிற்சிகள் தினம் எடுக்கிறேன்

மனப்புறம்  பூந்தளிர் பூக்க வைத்தாய்
நினைத்திட நினைவுகள் கொட்டிவைத்தாய்
கனா புறங்களில் அனுதினம்
என்னுடன் இருந்து விட்டாய்

பூக்களில் தேனாய் சுரந்து விட்டாய்
பாக்களில் பொருளாய் சேர்ந்து விட்டாய்
விக்கலில் உன்னை மறுமுறை நினைக்க வைத்தாய்

கால்கள் தரையினில் மிதக்குதே
உனைக் கண்டவுடன் உடல் தகிக்குதே
மனதினில் புரை ஏற்றுதே
காதல் உரை உன்னை புரியவே !
மறுமுறை என்னை தெளியவே
உன்னுடன் நானும் நடக்கவே
பயிற்சிகள் தினம் எடுக்கிறேன்

உன்னுடன் வாழ்ந்து பார்க்க துடிக்குதே
இதயமும் புதியதாய் இளகுதே
என்னை ஏற்றுக்கொள் அது புரிந்திடுமே !

Sunday 24 February 2013

ஏதோ சில காலம் என்னுள்ளே...

நித்திரை என்றால் கனவுகள் கொட்டும்
கவிதை என்றால் உன்னை மீட்டும்
என் மனம் புரியாதோ ?
அன்பே அன்பே என் மனம் புரியாதோ !

ஏதோ உன்னை கண்டாலே என் மனதுள்ளே
சிறு பூக்கள் பூக்கிறதே
அன்பே நீ வந்த வழி எதுவென்று கூறாயோ ?
நீ வந்ததும் என் மௌனம் உடனே கலைந்தது
அன்பே அன்பே உயிர் வரை உள்ளே வா
சில காலம் நானில்லை நானாக

நீ என்றால் பூக்கள் மகிழும்
நீ என்றால் பறவைகள் சிரிக்கும்
என் மனம் புரியாதோ ?
நீ என்றால் எனக்கு ஆதி அந்தம்
பூமிக்கு வானம் போல
என்னுடன் நடப்பாயோ ?

ஏதோ சில காலம் என்னுள்ளே
கவிதைகள் தைத்தாயோ ?
காலம் உன் கைகளில் சிரிக்கிறதே
எனைப் பாத்துதான்
அழகே உனைக் கண்டு
அதிரும் நில நடுக்கம் கூட அமைதியாகிறதே
கனவு என்று மறுத்தும்
கவிதை எழுதும் நாள் குறித்தேன்.

Saturday 16 February 2013

போதும் நீ பொங்கும் தீ !!!

ராக் ஸ்டார் படத்தின் ஜோபி மேய்ன் பாடல் தமிழில் எனது முயற்சியில்.

( Song "Jobhi Mein" from the movie "Rock Star 2011" composed by A R Rahman ).

இது தமிழாக்கம் அல்ல. உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இதோ பாடல் !


யயயா ! யயயா ! ஓ ... ஓ ....

போதும் நீ பொங்கும் தீ ! என் மனதிலே
உன்னைப்  பார்த்ததிலே அந்த நொடியினிலே


பணம் புகழ் எல்லாமே தாண்டி
முடிவிலா காதல் உடன் கொண்டு
நானும் உன்னை என் நெஞ்சில் விதைத்தேன்
வரம் வாங்கி வந்தேன் நான் உடன்
ஒன்றாய் உன்னை சேர வந்தேன்

என்னோடு நீ ஒன்றாகி வா
எப்போதும் நாம் கொண்டாடலாம்
அகம் புறம் எல்லாமே கொண்டு
தமிழ் தரும் சுவைதானே என்று
பிணைந்திடும் என் காதலோடு எங்கும்
நிஜம் நிழல் எல்லாமே மறந்து
ரெட்டை வானவில் மழையில் காணலாம்
உன்னோடு சென்று

போதும் நீ பொங்கும் தீ ! என் மனதிலே
உன்னைப்  பார்த்ததிலே அந்த நொடியினிலே

எங்கே நீயென்று என்னோடு கண்ணும்
ஒன்றாக தேடும் ஓரப்பார்வை
அரங்கத்தின் அதிர்வினிலே
அமைதியாய் நீயும் தெரிந்தாய்

சங்கீதமே சஞ்சாரமாய்
என்னோடு நீ இசை மீட்டினாய்
கொல்லும் பனி எங்கெங்கும் வீதி
விழி ஈரம் காயும் முன்னே
துளி வெப்பம் என்னோடு சேர்த்தாய்

போதும் நீ பொங்கும் தீ ! என் மனதிலே
உன்னைப்  பார்த்ததிலே அந்த நொடியினிலே


யயயா ! யயயா ! ஓ ... ஓ .... ந ந நா நே ....

குளிராப் பனி

உன் நிழலோடு நானும் நடை போட வேண்டும்
பசும் புல்லின் நிறமாய் நான் மாற வேண்டும்
புல்வெளியின் பசுமை உன் அழகின் உருவாக வேண்டும்

பொங்கி வரும் அருவி சாரல்
உன்னோடு பழக எந்நாளும் முயலும்
முள்ளோடு பிணைந்த மலர்களும் என்னும்
உன்னோட வாசம் எந்நாளும் இருக்க.

என்னுள்ளும்  நேசம் உண்டு
உன்னை கண்ட பின்புதான்
பெண்ணாலே உண்டாகும் மனப் பித்து
என் இதயத்தை தைத்து
காதல் முகம் தரித்ததுவே
பனியா பனியா குளிராப் பனியா
மார்கழி மாதத்தில் இல்லாக் குளிரா
இப்போது கொண்டேனே உன் விழியினிலே
விழியின் மோகத்திலே என்னுள்ளே தாகங்களே.

Monday 11 February 2013

தொட்டபின்னும் தொடுவானம்

நெஞ்சுக்குள்ளே மின்னலடி
உன்னை எண்ணி மனப் பின்னலடி
வருணம் இல்லா என்னமடி
என்ன செஞ்சோம் குத்தம் அடீ !

கண்ணிலே கொண்டாடும் மனம் பித்தாடும்
உன்னை சென்றாடும் தென்றலின் பாதியடி
ஒளி பாயும் வேகமடி சராசரி தூரமடி
என் உள்ளெண்ணம் போகுமடி.

தொட்டபின்னும் தொடுவானம்
எட்டி எட்டி போகுமடி
நீல வானம் தூரமடி
கை நீட்டி எட்டி பிடி
உன் கிட்ட வந்து சேருமடி.

செவ்வானம சேலை கட்டி
உன்னுருவில் என்னருகே வந்ததடி
சில்லென்ற நீருண்டு உந்தன் குரலில்
சில்லென்ற ஒலி கேட்டேனடி

Sunday 10 February 2013

பௌர்ணமி கூட இருள்கிறதே

தலை கோதும் விரலுக்கு
தங்க நகை தாராயோ ?
முடி நகை அழகுக்கு
முல்லை பூ சூடாயோ ?
முழுமதியாய்  நீ வந்தால்
பௌர்ணமி கூட இருள்கிறதே
அழகாக நீ நடந்தால்
மண் கூட சிலிர்க்கிறதே
நீ  கை வைத்தால்
தேன் சேரும் பூக்களிலே
தேன் சேர்ந்த பூவெல்லாம்
நெடு நாட்கள் உயிர் வாழும்
உன்னாலே புன்னகை கொள்ளும்.
நீ பார்க்கும் பார்வையிலே
என்னுள்ளே ஒளி பாயும்
என்னைத் தான் பார்த்து போல்
என் மனமும் துள்ளதோ ?

மூச்சு காற்றும் தமிழ் படிப்பதென்ன...

கொஞ்சும் தமிழ் உந்தன் மொழியோ 
கண்மணியே முன்னும் பின்னும் 
உன்னை பார்த்த பின்னே
எந்தன் காலம் முன்னும் பின்னும் சென்றதுவே

உன் நிழலும் நானும் ஒன்று சேர்ந்த பின்னே
உன் சுவாசம் என் மூச்சில் கலந்த தென்ன ?
இதழின் ஓரம் வந்த  புன்னகையில்
இன்னும் இதழும் என்ன சேர்கிறதோ ?

காவியக் கலை பின்னே 
உன்னை ஓவியம் எடுத்த தென்ன ?
பிஞ்சு தமிழ் நீ பேசுகையில்
கொஞ்சு தமிழ் ஆன தென்ன
வேற்று மொழி கூடம் இருந்த பின்னும்
உந்தன் மூச்சு காற்றும் தமிழ் படிப்பதென்ன 

Friday 8 February 2013

வண்ணப்பூக்கள் வெள்ளையாகும்...

 மஞ்சள்  சிவப்பு உடை கொண்ட உந்தன் மேனி
உடை உடுத்துவதில் உந்தன் பாணி
என் நெஞ்சில் நான் கொண்ட ஆணி
இவையாவும் மகிழ்ச்சி தந்து போகும்.

காற்றில் இருக்கும் எந்தன் கால்கள்
உன்னைக் கண்ட பின்பு தானே
அந்த மகிழ்வைக் கொண்டாடிட தானே !

நீல நிற உடையில் நீ வந்தால்
என் நெஞ்சம் புண்ணாய் போகும்
பார் வண்ணம் யாவும் மாறும்
உந்தன் வண்ணம் கொண்டு
கடல் வானம் நீலம் தானே
உந்தன் வண்ணம் கொண்டதாலே !
அன்பின் நிறமோ எந்தன் மனமே
உன் கண்ணின் அழகே 

வண்ணப்பூக்கள் வெள்ளையாகும் 
நீ ஆசை கொண்ட வெண்மையால் தானே.

Wednesday 6 February 2013

காலையில் உன் முகம் பார்த்து...


உன்னைப் பார்த்த நாள் முதலிலே ,
எந்தன் வாழ்வின் ஏதோ காரணம்
அது உன்னைப் பற்றி எண்ணச் சொல்லுதே !
நினைவில் அது செல்லும் காலங்கள் யாவும் ,
கண்ணில் வலி ஏற்றிக் கொல்லுதே .

சுட்ட மண்ணிலே வெட்ட வெளியிலே ,
குறையும் தண்ணீர் தானாக ,
அருவி நீரிலே நீந்தும் மீனாக ,
எந்தன் மனமும் மாறியதே !

கனவில் உன்னுடன் நான் கண்ட அனுபவம்
நெஞ்சில் நுழைந்தது கண்ணில் நின்றது
அதன் ஆழம் நீ அறிவாயோ ?

மஞ்சள் வெயில் காலம் முழுதும்
உந்தன் முகம் நானும் கண்டேன்.
ஆற்று மணலில் துளி நீராக
வான் வெளியிலா உந்தன் ஆசனம் ,
காலம் முழுதும் எனக்கு சாசனம் ,
எழுதிக் கொடு என்று கேட்டு நானும் வந்தேன் .
பச்சை புல்லிலே பசுமை போலவே ,
நானும் மாறி தான் சென்றேனே ,
கொஞ்சும் நேரத்தில் மிஞ்சும் எண்ணம் கொண்டாயோ !

காய்ந்த மணலிலே நீர் இருந்த காலத்தை
எண்ணி எண்ணியே வருந்தும்
நிலைக்கு என்னை மாற்றாதே
உன் கண்ணின் ஒளியிலே வலி குறையும்
சூரிய ஒளி கண்ட பயிராக !.

மாட மளிகை வாழ்க்கை யாவும் இன்று அலுத்ததே .
உன்னை காணமல் இருக்கும் நேரம் யாவும்
எங்கு இருந்தாலும் இது நடக்கிறதே ...

நீ என் வாழ்வினில் ஏன் வந்தாய்
அன்பை மட்டும் ஏன் தந்தாய் ?
கணவன் மனைவி போல என்றும் வாழவே
உன்னைக் கொடு என்றேனே.
தினமும் காலையில் உன் முகம் பார்த்து
விழிக்கும் வரம் கிட்டதோ ?

புனல் கனன்ற நதியில்...


புனல் கனன்ற நதியில் தனலன்ன
செங்குருதியோட செய்வார் மதியினை அறுத்தெறிய
நிந்தனை இல்லா நித்திரை நம்மவர் களித்திட
வீறு கொண்டெழுந்து மாந்தர் தம் நெஞ்சில் துணை ஏற்றி
கற்பிதம் கற்பித்தவர் நிலையற்றவர்
என உலகுணர்த்தி
மக்கள் மனம் மகிழ தவம் செய்வோம்

குருதி எதற்கு ? வெண் புகை எதற்கு ?
வெடி குண்டு அனல் கக்க
மாந்தர் தம் குருதியோ வெக்கையில்
என காலம் உழன்ற நிலையில்
மனமுவந்து நீ விலகி சென்றாயோ
தீவிர நெறி பாதகமே !

மக்களை நிலையறச்  செய்யும்
மாயங்கள் அலை குலையச் செய்யும்
குழந்தை தம் களிப்பில் குரோதக் கண்ணேறி
பார்க்கும் கயவர் பார்வை அறச் செய்ய
நம் மனதுகளை அமைதிப் படுத்த
நாகரீக ஒளியில் பண்படுத்த
நெறியில்லா கள்வர்களை
மனிதப்படுத்த தீருவோம்
சாம்பல் துவண்டிடச் செய்ய
வா நானிலம் எங்கும் நம் சோதரர் தான்
வலியக்  கொண்டே இத்தனை ஏறச் செய்து
உவர் பார்வை அறச் செய்வாய்

Monday 4 February 2013

கண்டும் காணாமல் நீ !

பனியே நீ பனியின் துளியே
கண்ணே என் கண்ணின் மணியே
வழிகள் இடம் மாறும் தானே
அதற்கே என் பஞ்சுள்ளம்
உன்னை காண மறுக்கும்
உண்மை தெரிந்து கொள்
என்னை புரிந்து கொள்
நானே தொலைந்தேன் நானே தான்  தொலைந்தேன்
உன்னைக் கண்டபின் .
 
வெண்ணிலா நீ எந்தன் கண்ணிலா ?
இல்லை என்னை சுமக்கும் இந்த மண்ணிலா ?
இல்லை என் மேலே அந்த வானிலா ?
கண்டும் காணாமல் நீ ,
நின்றும் நிற்காமல் நான்
பட்டும் படாமல் நீ பார்த்தாய்
தொட்டும் தொடாமல் நான் விழுந்தேன்

கடலை ஏமாற்றி வான் சேரும் நீர் போல
நிலத்தை ஏமாற்றி வானில் பறக்கிறாயோ ?

கண்ணாடி காலையிலே கண் மூடி நாணிடுமே

விண்ணில் ஒரு விண்மீனாய்
என் நெஞ்சில் காதலாய்
வந்தாள் எனைத் தேடி
நீ பார்க்கும் பார்வையிலே
என்னுள்ளே ஒளி பாயும் ,
என்னை தான் பார்த்தது போல்
என் மனமும் துள்ளாதோ ?
கண்ணாடி காலையிலே
கண் மூடி நாணிடுமே,
நீர்த்துளிகள் உன் மீது
வெட்கத்தால் பூத்திடுமே
கார் கால மழையில்
!
 

நெஞ்சு பலகையில் நீயும் எழுத

குழந்தை கொள்ளும் கோபம் நீயே
கோபம் கொள்ளும் குழந்தையும் நீயே
கண்ணில் ஒளி கண்டு கண்ணக்குழி கண்டு
பார்வை துளிர்க்கின்றதே காற்றில் தென்றல்
உன் பிம்பம் எடுக்கின்றதே
உயிர் கொண்ட பிம்பம் நீதானே உண்டு
மரங்களின் பசுமை நீயடி,
அழகு உரு கொள்ளும் பதுமை நீயடி.
கால நேரம் யாவும் மறந்து நானும்
உயிர் கொண்டேனே உயிருள்ளே நுழைந்து,
என்னுள்ளே கலந்தாய்
 எங்கு சென்றால்,பார்த்தால் எதிரினில் நீயே வந்தாய்.
அரங்கத்தின் அதிர்வினிலே அமைதியாய் நீயும் தெரிந்தாய்,
நெஞ்சு பலகையில் நீயும் எழுத,
அஞ்சி நானும் உன்னிடம் விலக,
உனைப் பார்க்கும் கண்கள் கூட சொர்க்கம் சேருதே,
உன் கூந்தல் காற்றில் என் நெஞ்சம் வெந்து போகுதே
 

நம்பி வந்தேன் இதுவரை

நான் நம்பி வந்தேன் இதுவரை,
உருவாக்குவபனின் அவசரம் பிரபஞ்சத்தின் அழகை உருவாக்க,
அவசரம் தீர்ந்தது உன்னை உருவாக்கியவுடன்.
என்னிடம் சொன்னான் அழகின் முழுமை நீயென்று .

எப்படி நீ என்னிடம் வந்தாய்,
ஆசிர்வதிக்கப் பட்டவன் ஆனேன் ,
நம்பவும் முடியவில்லை , மறுக்கவும் முடியவில்லை .

கார் கால கதிரவனின் அணைப்பிலே
மெல்லிசையாய் வந்தாய் ,
அன்பினால் அதிர்ந்து போனேன்

வெண்ணிறத்தில் வான வில்லாய் !



வெண்ணிறத்தில் வான வில்லாய்
கண்ணிமைக்குள் காட்சி தந்தாய்
சின்னக் கண்களில் தாளம் போட்டாய்
என் நெஞ்சில் பாலம் போட்டாய்.

மழைத்துளிகள் நடமாடும்
அவள் மேனியில் பட்ட பின்னே
அவளைத் தொட்டு விட்ட ஆசையில்.

நிலவு வளைவுகள் நீயும் கொண்டு
எனை ஏன் இப்படி வதைத்தாய்?
அதற்கே என் பஞ்சுள்ளம்
உன்னை காண மறுக்கும் .

ரத்தில் திகு திகு என ஏறும்
நெஞ்சத்தில் தொடு தொடு என தூரம்
பொறு பொறு என உன் கண்ணசைவு
தந்தால் தந்தால் கனவு ஈடேறும்
வார்த்தைகள் காத்துக்கிடக்கின்றன , அவள் உச்சரிக்க .
அதனால் உருவாக்கப் பட்டதின் அர்த்தம் விளைவிக்க.
பாடல்கள் மௌனிக்கின்றன , அவள் முனுமுனுக்க ,
அதனால் மெல்லிசையால் மெய் சிலிர்த்து விட.!

Sunday 3 February 2013

பிப்ரவரி 13 , 2011 அன்று பேஸ்புக்கில் எழுதிய கவிதை

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ராவணன்  இந்தி பாடல்களைக் கேட்ட பாதிப்பில் எழுதிய கவிதை!.
பிப்ரவரி 13 , 2011 அன்று பேஸ்புக்கில் பதிவு செய்தது.


இந்தியில் ராஞ்சா ராஞ்சா , தமிழில் காட்டு சிறுக்கி !

ராத்திரி பூக்கும் ராத்திரி பூக்கும் கனவு பூவா நீ ?
நான் தொலையும் நான் தொலையும் இன்பத்தீவா நீ?
கள்ளி பாலால் என்னைக் கொல்லாதே
நான் காதல் குழந்தையடி ,
என் காதல் உண்மை அடீ.

கட்டி பிடிப்பாளோ ? கொட்டி தீர்ப்பாளோ?
முத்த மழையால் எனை நனைய வைப்பாளோ ?

அவள் கண்ணால் தடவும் நேரத்துல ,
காணாப் போகும் மனசும் அடீ ~
காணப் போன மனச நானும் தேடி
என்ன நானும் தொலைச்சனடீ .
காதல் கடல் பார்வையடி ,
தத்தளிக்கும் என் மனசு,
உல் நெஞ்சு உருகு தடி ,
நீ நடக்கும் பாதையில முள் இருந்தா .

காதல் ராணி காதல் ராணி நீ காற்று பூவா நீ ?
வாசம் மட்டும் என்றும் குறையா மூச்சு பூவே நீ .
எட்டி மிதிப்பாளோ என்னோட நெஞ்சில்,
காதல் அடியால் மகிழ வைப்பாளோ ?

என் தமிழ் கவிதை , வெகு நாட்களுக்கு முன்பு எழுதியது

 என் தமிழ் கவிதை , வெகு நாட்களுக்கு முன்பு எழுதியது , 2008 நவம்பர் மாத வாக்கில் இருக்கும்.
 கருமையில் நீலம் சேர்த்து
நீலத்தில் பூக்கள் சேர்த்து
உன் உடை அழகுக்கு ஈடேதடி !
கார் மேகம் உன்னைக் கண்டு
உனைத்தொடும் ஆசை கொண்டு
மழைத்துளிகளை உதிர்க்க நினைத்து
மடியாதோ உயிர்விட்டு !

வெள்ளைத்தாளில் வெண் புள்ளி
இருக்குமிடம் தெரியாதே ,
அதைப்போல எனக்குள்ளே நீயே சேர்ந்தாயே
அனல் மேலே அமர்ந்தேனடி
உனைக் காண நாளிலே
சிலிர்ப்பாக சிலிர்க்க வைத்தாய்
சில நேரம் எனை மறக்க வைத்தாய்

உனக்காக நானும் வந்து உனக்காக எதிர் பார்த்து நின்று
மறந்தேனடி உனைப்பார்த்துமே
ஒரு தடவை பார்க்காமல் என் கண்ணும் தேடாமல்
ஒரு நாளும் இருக்காதே என் மனமே !

நீலவானி நீ நடந்தால் இடி கூட இளகும்
மழை வானம் நீ பார்த்தால்
கார் மேகம் உடனே துள்ளும்
துள்ளும் மழையுடம் நீ துள்ளி நடந்தால்
என் மனதை அள்ளாதோ உன் சீரழகே

செவ்வானம் வெட்கத்தால் சேலை கட்டி
இழைத்ததுபோல் நீ நடந்தாய் பெண்ணழகே !