Wednesday 6 February 2013

காலையில் உன் முகம் பார்த்து...


உன்னைப் பார்த்த நாள் முதலிலே ,
எந்தன் வாழ்வின் ஏதோ காரணம்
அது உன்னைப் பற்றி எண்ணச் சொல்லுதே !
நினைவில் அது செல்லும் காலங்கள் யாவும் ,
கண்ணில் வலி ஏற்றிக் கொல்லுதே .

சுட்ட மண்ணிலே வெட்ட வெளியிலே ,
குறையும் தண்ணீர் தானாக ,
அருவி நீரிலே நீந்தும் மீனாக ,
எந்தன் மனமும் மாறியதே !

கனவில் உன்னுடன் நான் கண்ட அனுபவம்
நெஞ்சில் நுழைந்தது கண்ணில் நின்றது
அதன் ஆழம் நீ அறிவாயோ ?

மஞ்சள் வெயில் காலம் முழுதும்
உந்தன் முகம் நானும் கண்டேன்.
ஆற்று மணலில் துளி நீராக
வான் வெளியிலா உந்தன் ஆசனம் ,
காலம் முழுதும் எனக்கு சாசனம் ,
எழுதிக் கொடு என்று கேட்டு நானும் வந்தேன் .
பச்சை புல்லிலே பசுமை போலவே ,
நானும் மாறி தான் சென்றேனே ,
கொஞ்சும் நேரத்தில் மிஞ்சும் எண்ணம் கொண்டாயோ !

காய்ந்த மணலிலே நீர் இருந்த காலத்தை
எண்ணி எண்ணியே வருந்தும்
நிலைக்கு என்னை மாற்றாதே
உன் கண்ணின் ஒளியிலே வலி குறையும்
சூரிய ஒளி கண்ட பயிராக !.

மாட மளிகை வாழ்க்கை யாவும் இன்று அலுத்ததே .
உன்னை காணமல் இருக்கும் நேரம் யாவும்
எங்கு இருந்தாலும் இது நடக்கிறதே ...

நீ என் வாழ்வினில் ஏன் வந்தாய்
அன்பை மட்டும் ஏன் தந்தாய் ?
கணவன் மனைவி போல என்றும் வாழவே
உன்னைக் கொடு என்றேனே.
தினமும் காலையில் உன் முகம் பார்த்து
விழிக்கும் வரம் கிட்டதோ ?

No comments:

Post a Comment